Monday, October 29, 2018

தேவையான பொருட்கள் :

இட்லி மாவு - ஒரு கப்
முட்டை - 2
சின்ன வெங்காயம் - 20 
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு 
கடுகு - கால் ஸ்பூன்
உளுந்து  - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை :

பச்சைமிளகாய், கறிவேப்பிலையை  சின்ன வெங்காயத்தை பொடியாக  நறுக்கவும்.


 முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும்.

அடித்த முட்டையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். 

 பிறகு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து  போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி முட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

குழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.  

பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.


சுவைாயன  முட்டைப் பணியாரம் தயார்.

0 comments:

Post a Comment