கலிபோர்னியா: அமெரிக்காவில் மலையை ரசிக்க சென்ற இந்திய ஜோடி பெரிய பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் நிறைய பிரபலமான சுற்றுலா தளங்கள் உள்ளது. அந்த வகையில் கலிபோர்னியாவில் உள்ள யோசேமிட் தேசிய பார்க் மிகவும் பிரபலம். இங்கு இருக்கும் உயரமான மலைகள் சுற்றுலாவாசிகளை அதிகம் கவர கூடியது. இந்த மலைக்கு சுற்றுலா சென்ற இந்திய தம்பதிகள் பலியாகி உள்ளனர்.கடந்த வாரம் இந்த பார்க்கில் உள்ள மலையில் இருந்து இரண்டு பேர் கீழே விழுந்து பலியாகி உள்ளனர். இதையடுத்து இவர்களை மீட்கும் பணி நடந்தது. யோசேமிட் தேசிய பார்க் மீட்பு படையினர் மலைக்கு கீழ் இறங்கி மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். கடந்த அக்டோபர் 26ம் தேதி இந்த மீட்பு பணி தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது இந்த தம்பதிகள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த விஷ்ணு விஸ்வநாத் அவரது மனைவி மீனாட்சி மூர்த்தி ஆகிய இருவர்தான் இந்த விபத்தில் பலியானது. இவர்கள் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக வசித்து வருகிறார்கள்.
இவர்கள் இணையத்தில் மிகவும் பிரபலமான நபர்கள் என்று கூறப்படுகிறது. ஹாலிடேஸ் மற்றும் ஹாப்பிலி எவர் ஆப்டர் (Holidays and Happily Ever Afters) என்ற பெயரில் இணையதள பக்கம் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் பெரிய அளவில் பிரபலமாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அந்த மலையில் உள்ள டஃப்ட் பாயின்ட் என்ற புள்ளிக்கு சென்று இருக்கிறார்கள். அங்கிருந்து போட்டோ எடுக்க முயன்ற சமயத்தில் இவர்கள் மலை பள்ளத்தில் வழுக்கி கீழே விழுந்திருக்கிறார்கள். ஒரு போட்டோ காரணமாக இவர்கள் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.