Saturday, October 27, 2018




    தினம் ஒரு திருக்குறள் - 
    Dhinam Oru Thirukural

    அறத்துப்பால், கடவுள் வாழ்த்து, பாயிரம்

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
    பகவன் முதற்றே உலகு.


    'எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதலானதாயிருப்பதுபோல உலகுக்கு இறைவன் முதல்வனாக இருக்கிறான்.' 

    விளக்கம் 

    அகரம்
    என்றால் புள்ளி என்று பொருள்.எல்லா எழுத்துக்களும் புள்ளியை முதலாக கொண்டே
    எழுகின்றன.வரிவடிவங்களுக்கு முதலெழுத்து புள்ளி.(புறத்தில்)

    எழுத்துக்கள் இல்லாத மொழிகளும் புள்ளியையே ஆதாரமாக கொண்டே எழுகிறது.
    எவ்வாறெனில் வாயிலிருந்து வார்த்தையாய் வெளிவருவதற்கு முன் அது எண்ணமாய் இருந்தது.
    எண்ணம் நினைவு என்ற புள்ளியிலிருந்து தோன்றுகின்றது.
    இந்த நினைவே அகரம் என்றழைக்கப்படுகிறது.(அகத்தில்)

    (அகர முதல=அகர ம்+உதல,உதலம்=உலகம்) 
    அகரம் என்றால் நினைவு.உதலம் என்றால் உலகம்.

    நான் உள்ளவரை உலகம் உண்டு.உலகம் உள்ளவரை நான் உண்டு.
    என்னையும் உலகத்தையும் பிணைக்கின்ற சக்தி ஒன்றும் உண்டு.அதுவே ஆதி.
    இந்த ஆதியை முதலாக கொண்டே உலகமும் நானும்.

    அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் 
    தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் 
    அந்தம் ஆதி என்மனார் புலவர்.
    சிவஞான போதம்.

    உருவத்தால் அவன் ஆண்,அவள் பெண் (உயர்திணை )
    மற்றவை அது உலகம்(அஃறினை) என்று சுட்டி 
    அறியப்படுகிற இம்மூன்றையும் முறையே மாயையை 
    கொண்டு படைத்து,காத்து மீண்டும் மாயையில் ஒடுக்கி 
    தான் மட்டும் தனித்து நிற்கின்ற அதையே ஆதி என்றுரைப்பர் 
    அறிஞர்(புலவர்).

    ஆக அனைத்தும் ஆதியையே முதலாக கொண்டுள்ளது.

0 comments:

Post a Comment