Saturday, October 27, 2018

டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்காவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் அறிவிப்பு


மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் பி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழ் பதிவுசெய்ய மற்றும் சமர்ப்பிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதத்துக்கு பிறகு உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கி கிளையின் மூலமாகவோ, இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திலோ டிஜிட்டல் முறையில் பதிவு செய்யவேண்டும். ஏற்கனவே ஆதார் எண் இணைக்கப்பட்ட ஓய்வூதியதாரர்கள் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதபட்சத்தில், வங்கி மேலாளர் கையொப்பம் இட்ட பூர்த்திசெய்த உயிர்வாழ் சான்றிதழ் படிவத்தை சமர்ப்பிக்கலாம். ஆதார் அட்டை உபயோகத்தில் உள்ள செல்போன் எண், ஓய்வூதியம் ஆர்டர் மற்றும் ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகலை தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் வருகிற ஜனவரி 20-ந்தேதிக்குள் சமர்ப்பிக்காத பட்சத்தில் அந்த மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment