Wednesday, October 17, 2018

உலகில் ஏதாவது ஒரு இடத்தில், வறுமையால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி.
இவரது சிறுவயது போராட்டமும், முயற்சியின் விளைவு தான் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 ம் ஆண்டு அக்டோபர் 17ல் உருவாக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ந் தேதி உலகம் முழுவதும் வறுமை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
1992-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த வறுமை ஒழிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. உலகின் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, உலக அளவில், பட்டினியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 2000 ஆம் ஆண்டில் 80 கோடியாக இருந்தது. இது 2005&ம் ஆண்டில் 85 கோடியாக அதிகரித்தது. அது தற்போது 100 கோடியையும் தாண்டி விட்டது.
பட்டினியால் வாடுவது என்பதற்கு நாள் ஒன்றுக்கு 1,800 கலோரியை விட குறைவாக உணவு உண்கிறார்கள் என்று அர்த்தம். பட்டினியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கர்கள் 100 கோடிப் பேரில் 2.20 கோடி பேர் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்காவில் வசிக்கிறார்கள்.
இன்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்...

0 comments:

Post a Comment