Wednesday, October 24, 2018

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 26, 27ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கை மற்றும் அதனை ஒட்டியிருக்கும் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகம், கேரளா, புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் இன்று இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், நாளையும், நாளை மறுநாளும் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும், அக்டோபர் 26 மற்றும் 27ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment