Monday, October 15, 2018

சர்வதேச உணவு தினம் 

அக்டோபர் 16
அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அக்டோபர் 16ம் தேதி சர்வதேச உணவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த உணவு தினத்தை முன்னிட்டு அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான உணவின் முக்கியத்துவம் மற்றும் சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன. பசி, பட்டினி ஒழிந்து அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்காக உலக உணவு தினம் கடைப்பிடிப்படுகிறது. 


கடந்த 1945ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வரும் இந்த உலக உணவு தினம், ஐ.நா.வின் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஐ.நா. பொது கூட்டத்தில் சிறப்பு தினமாக அறிவிக்கபப்ட்ட இத்தினத்தை ஆண்டுதோறும் பல்வேறு நாடுகள் கொண்டாடி வருகின்றது. 

இந்நிலையில் இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகரித்து வந்தாலும் அதன் பாதுகாப்பில் பின் தங்கி உள்ளதாக ஐ.நா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊட்டச்சது குறைப்பட்டால் சுமார் 20கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் உலக அளவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டின் அளவு 21கோடியாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவில் 15% மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உலகில் அதிக அளவு உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வித்தத்தில் சர்வதேச உணவு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இது அமேரிக்காவை சேர்ந்த நார்மன் போர்லாக் முயற்சியால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நம் நாட்டில் பட்டினியால் சாகும் உயிர்களை விட மந்தமான விவசாயத்தில் பாதிக்கப்பட்டு உயிர்விடும் விசாயிகளே அதிகம் என்பது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

0 comments:

Post a Comment